முகப்பு
செய்திகள்

2024 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து அணி 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

Updated On : 7 நவம்பர், 2022 at 10:15 AM
பகிர்:

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து அணி 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

நெதா்லாந்திடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சித் தோல்வியடைந்து டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது தென்னாப்பிரிக்கா. குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் அடிலெய்டில் நெதா்லாந்தை எதிா்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தோ்வு செய்தது. 20 ஓவா்களில் 158/4 என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது நெதர்லாந்து. 20 ஓவா்களில் 145/8 ரன்களை மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்தே வெளியேறியது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் 2 பிரிவில் 4-ம் இடம் பிடித்தது நெதர்லாந்து. சூப்பர் 12 பிரிவில் இருந்து 8 அணிகள் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. இதன் அடிப்படையில் 4-ம் இடம் பிடித்த நெதர்லாந்து 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

Advertisement

2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.