செய்திகள்

2024-2027 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் பட்டியல் வெளியீடு!

2024-2027 ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது .

DIN

2024-2027 ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா மற்றும் வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 2024-2027 வரை ஐசிசி யு19 போட்டிகளை நடத்தும் நாடுகளாக அங்கீகரித்துள்ளது. 

அதன்படி, 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026 இல் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில நடைபெறுகிறது.

2025 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை  மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெறுகிறது, மேலும், 2027 ஆம் ஆண்டு மகளிர் போட்டியை வங்கதேசம் மற்றும் நேபாளம் இணைந்து நடத்துகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.

மார்ட்டின் ஸ்னோடன் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைக் குழுவால் மேற்பார்வையிடப்பட்ட போட்டி ஏல செயல்முறை மூலம் ஹோஸ்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐசிசி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொரு ஏலத்தையும் முழுமையாக ஆய்வு செய்த குழுவின் பரிந்துரைகளை ஐசிசி வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT