பட்லருடன் அடில் ரஷித் (இடது) 
செய்திகள்

ஐபிஎல் போட்டியில் விளையாட இங்கிலாந்து வீரர் ரஷித் ஆர்வம்!

2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்வேன் என இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கூறியுள்ளார்.

DIN

2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்வேன் என இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து உலக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய அடில் ரஷித், அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார். இந்தமுறை ஐபிஎல் ஏலத்தில் என்னுடைய பெயரைக் கொடுப்பேன் என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார். 

34 வயது அடில் ரஷித் இங்கிலாந்து அணிக்காக 118 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியிருந்தாலும் இதுவரை ஒரே ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT