செய்திகள்

ஒரு வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: வார்னர் அறிவிப்பு

அடுத்த ஒரு வருடத்தில் ஆஷஸ் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகப் பிரபல வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

DIN


அடுத்த ஒரு வருடத்தில் ஆஷஸ் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகப் பிரபல வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

36 வயது வார்னர், ஆஸ்திரேலிய அணிக்காக 2011 முதல் 96 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 2009 முதல் 138 ஒருநாள், 99 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த வருட ஆஷஸ் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஒரு பேட்டியில் வார்னர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் முதலில் விடைபெறுவேன். அப்படித்தான் நடக்கும். அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் நடைபெறும். அடுத்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய கடைசி 12 மாதங்களாக இருக்கும். எனக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட், டி20 மிகவும் பிடிக்கும். 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT