செய்திகள்

முதல் டி20: வெளிநாட்டில் முதல்முறையாக...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 18) தொடங்கிய டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். வெலிங்டனில் இன்று நடைபெறவிருந்த முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடிய டி20 ஆட்டங்களில் முதல்முறையாக டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் ஓர் ஆட்டம் கைவிடப்பட்டது இன்றுதான். இதற்கு முன்பு இந்தியாவில் 4 டி20 ஆட்டங்கள் இதுபோல டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் கைவிடப்பட்டுள்ளன.

இந்திய ஆடவர் டி20: டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் கைவிடப்பட்ட ஆட்டங்கள்

v நியூசிலாந்து, விசாகப்பட்டினம், 2012
v தெ.ஆ., கொல்கத்தா, 2015
v ஆஸ்திரேலியா, ஹைதராபாத், 2017
v தென்னாப்பிரிக்கா, தர்மசாலா, 2019
v நியூசிலாந்து, வெலிங்டன், 2022.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT