நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 191 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சினைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: த்ரிஷா பகிர்ந்த முத்தக் காட்சி: வைரல் விடியோ
தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் களமிறங்கினர். ரிஷப் பந்த் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த இணை சீராக விளையாடியது. இஷான் கிஷன் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில் சூர்யகுமார் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை மைதானத்தில் நாலாபுறங்களிலும் பறக்கவிட்டார். இஷான் கிஷன் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த போதிலும் அதிரடியாக சிக்ஸர் மழையினைப் பொழிந்த சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க: பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.