கால்பந்து உலகக் கோப்பை: மூன்று ஆட்டங்களும் அபாரமான கோல்களும் (ஹைலைட்ஸ் விடியோ)
2-ம் நாளன்று இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 2-ம் நாளன்று இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அமெரிக்கா - வேல்ஸ் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
கத்தாரில் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளைத் தொடா்ந்து நடைபெற்ற முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதின. ஈகுவடாா் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2-வது நாளன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஈரானை 6-2 எனத் தோற்கடித்தது இங்கிலாந்து. ஈரான் கோல்கீப்பருக்கு 8-வது நிமிடத்தில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து. ஆட்ட முடிவில் 6-2 என எளிதாக வென்றது. அமெரிக்கா - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. 64 வருடங்கள் கழித்து வேல்ஸ் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. நெதலாந்து - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 2-ம் பாதியில் இரு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி.
இங்கிலாந்து - ஈரான்
நெதர்லாந்து - செனகல்
அமெரிக்கா - வேல்ஸ்