இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. 2-வது டி20 ஆட்டத்தில் சூர்யகுமாரின் சதத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் செளதி கேப்டனாகச் செயல்படுகிறார். மார்க் சேப்மன் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் விளையாடுகிறார். இதனால் இந்த ஆட்டத்திலும் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக்குக்கு இடம் கிடைக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.