செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: ஸ்பெயின் வரலாற்று வெற்றி! 

DIN

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. தற்போது குரூப் இ பிரிவில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதியது. 

பாதி நேர ஆட்டத்திற்குள்ளாகவே ஸ்பெயின் 3 கோல்களை அடித்து அசத்தியது. அதுவரை கோஸ்டா ரிக்கா ஒரு கோல்கூட அடிக்கவில்லை. பின்னர்  ஸ்பெயின் மொத்தமாக 7 கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றது. 

ஸ்பெயின் 5 க்கும் அதிகமான கோல்களை உலக்கோப்பை போட்டிகளில் இதுவரை 3 முறை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1986 டென்மார்க்குடனும் (5-1), 1998 புல்கேரியாவுடன் (6-1) இதற்குமுன் அடித்திருந்தது. தற்போது 7 கோல்களை அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஸ்பெயின் அணியின் அதிகபட்ச கோல்கள் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT