செய்திகள்

முத்தரப்பு டி20: பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய நியூசிலாந்து

முத்தரப்பு டி20 போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி.

DIN

முத்தரப்பு டி20 போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒருவராலும் 30 ரன்களை எடுக்க முடியாத அளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசினார்கள் சுழற்பந்து வீச்சாளர்களான சான்ட்னர், பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர். சான்ட்னர், பிரேஸ்வெல், செளதி ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். ரிஸ்வான் 16, பாபர் ஆஸம் 21 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். எளிதான இலக்கை 16.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. ஃபின் ஆலன் 42 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்தார். கான்வே 49, வில்லியம்சன் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்த வெற்றியினால் 3 ஆட்டங்களில் 2 வெற்றியுடன் அதிக ரன்ரேட்டுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. 2 வெற்றிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான். வங்கதேச அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT