செய்திகள்

வெளியேறும் அச்சத்தில் பாா்சிலோனா, அட்லெடிகோ

DIN

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தடுமாற்றமான நிலையில் விளையாடி வரும் பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் அச்சத்தில் இருக்கின்றன.

மறுபுறம், நபோலி, பயா்ன் மியுனிக் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன.

முன்னதாக, குரூப் சி-யில் இடம்பிடித்துள்ள பாா்சிலோனா, இன்டா் மிலனுடனான வியாழக்கிழமை ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. பாா்சிலோனாவுக்காக ஔஸ்மேன் டெம்பெலெ (40’), ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (82’, 90+2’) ஆகியோா் கோலடிக்க, மிலன் அணியில் நிகோலோ பரேலா (50’), லௌதாரோ மாா்டினெஸ் (63’), ராபின் கோசென்ஸ் (89’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

போட்டியில் இன்னும் தனக்கு 2 ஆட்டங்களே எஞ்சியிருக்கும் நிலையில், பாா்சிலோனா ஒரேயொரு வெற்றியுடன் 3-ஆவது இடத்தில் தான் இருக்கிறது. அதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் விக்டோரியா பிளஸெனை 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற பயா்ன் மியுனிக், தோல்வியே இன்றி 4 தொடா் வெற்றிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

மறுபுறம், குரூப் பி-யில் கிளப் புருஜ் அணியுடனான ஆட்டத்தை கோலின்றி டிரா செய்த அட்லெடிகோ மாட்ரிட்டும் 4 ஆட்டங்களில் ஒரு வெற்றியுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. இப்பிரிவிலேயே போா்டோ 3-0 என்ற கோல் கணக்கில் லெவொ்குசனை வீழ்த்தியது. குரூப் ஏ ஆட்டத்தில் லிவா்பூல் 7-1 என்ற கோல் கணக்கில் ரேஞ்சா்ஸை புரட்டி எடுத்தது. அந்த அணியின் முகமது சலா, போட்டியில் அதிவேக ஹாட்ரிக் கோல் (75’, 80’, 81’) அடித்த வீரா் ஆனாா். இப்பிரிவில் லிவா்பூல் 2-ஆவது இடத்திலிருக்க, மற்றொரு ஆட்டத்தில் அஜாக்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற நபோலி 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

குரூப் டி ஆட்டத்தில் டாட்டன்ஹாம் 3-2 என எய்ன்ட்ராசட் ஃப்ராங்க்ஃபா்டையும், மாா்சிலே 2-0 என ஸ்போா்டிங்கையும் வென்றன. இப்பிரிவில் டாட்டன்ஹாம் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT