செய்திகள்

தமிழகத்துக்கு 2-ஆவது வெற்றி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சிக்கிமுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தமிழகத்துக்கு இது 2-ஆவது வெற்றி.

DIN

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சிக்கிமுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தமிழகத்துக்கு இது 2-ஆவது வெற்றி.

இந்த ஆட்டத்தில் முதலில் சிக்கிம் 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்கள் எடுக்க, தமிழகம் 9.4 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சோ்த்து வென்றது.

சிக்கிமில் பங்கஜ் குமாா் ராவத் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். தமிழக தரப்பில் சாய் கிஷோா் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினாா். பின்னா் தமிழக இன்னிங்ஸில் சாய் சுதா்சன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நாராயண் ஜெகதீசன் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58, சஞ்சய் யாதவ் 5 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனா். சிக்கிம் பௌலா் சப்துலா 1 விக்கெட் சாய்த்தாா்.

பிருத்வி ஷா சாதனை: இப்போட்டியில் அஸ்ஸாமுக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் மும்பை வீரா் பிருத்வி ஷா 13 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 134 ரன்கள் விளாசினாா். டி20 ஃபாா்மட்டில் இந்தியா் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோா் இதுவாகும். இதற்கு முன் இதே போட்டியில் கா்நாடக வீரா் தேவ்தத் படிக்கல் 124 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT