பாகிஸ்தான் அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

முத்தரப்பு டி20: பாகிஸ்தான் சாம்பியன்

முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது பாகிஸ்தான் அணி.

DIN

முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது பாகிஸ்தான் அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்தார். 

இலக்கை விரட்டியபோது ரிஸ்வான் 34, பாபர் ஆஸம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் நெருக்கடியை எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி. எனினும் முகமது நவாஸும் ஹைதர் அலியும் அதிரடியாக விளையாடினார்கள். ஹைதர் அலி 15 பந்துகளில் 31 ரன்களும் நவாஸ் 22 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள். பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முத்தரப்பு டி20 போட்டியின் சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகனாக முகமது நவாஸும் தொடர் நாயகனாக மைக்கேல் பிரேஸ்வெல்லும் தேர்வானார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT