செய்திகள்

சையத் முஷ்டாக் அலி: 61 பந்துகளில் 134 ரன்கள் எடுத்த பிருத்வி ஷா!

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் பிருத்வி ஷா எடுத்த ரன்கள்...

DIN


சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் மும்பை வீரர் பிருத்வி ஷா 46 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். 

ராஜ்கோட்டில் அஸ்ஸாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை கேப்டன் பிருத்வி ஷா, 61 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்து அசத்தினார். 

டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக சதமடித்துள்ளார் பிருத்வி ஷா. அரை சதத்தை 19 பந்துகளிலும் சதத்தை 46 பந்துகளிலும் எட்டினார். 5-வது ஓவரில் 2 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடித்து எதிரணியை நிலைகுலைய வைத்தார். 

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் பிருத்வி ஷா எடுத்த ரன்கள்: 55*(34), 29(12) & 134(61). இதையடுத்து இந்திய டி20 அணியில் பிருத்வி ஷா விரைவில் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT