உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று ருத்ராங்ஷ் சாதனை
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றாா்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றாா்.
அந்தப் பிரிவின் இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் டேனிலோ டெனிஸ் சொலாஸோவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். இது அவரின் முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான கிரண் ஜாதவ் ரேங்கிங் சுற்றுடன் வெளியேறினாா்.
இப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த 2-ஆவது இந்திய வீரா் என்ற பெருமையை ருத்ராங்ஷ் பெற்றுள்ளாா். முன்னதாக இதே பிரிவில் அபினவ் பிந்த்ரா 2006-ஆம் ஆண்டு குரோஷியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கத்தை தனதாக்கியிருந்தாா்.
Advertisement
Advertisement
ருத்ராங்ஷ், இப்போட்டியின் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தனக்கான இடத்தையும் உறுதி செய்திருக்கிறாா். அந்த ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்குத் தகுதிபெற்றிருக்கும் 2-ஆவது இந்தியா் இவா். சமீபத்தில் குரோஷியாவில் நடைபெற்ற ஷாட்கன் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்தியாவின் பௌனீஷ் மெந்திராட்டா, டிராப் பிரிவின் மூலம் தனக்கான ஒலிம்பிக் இடத்தைப் பெற்றுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.