செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்திய நமீபியா, சச்சின் டெண்டுல்கர் என்ன சொன்னார் தெரியுமா?

டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நமீபியா அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார

DIN

டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நமீபியா அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை டி20 போட்டிகள் இன்று (அக்டோபர் 16) தொடங்கின. உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அண்மையில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

இந்நிலையில், நமீபியாவின் இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நமீபியாவின் பெயரை நினைவில் வைத்துக் கொள்க என கிரிக்கெட் உலகிற்கு நமீபியா கிரிக்கெட் அணி கூறியிருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT