செய்திகள்

டிசம்பரில் வங்கதேசம் செல்கிறது இந்தியா

DIN

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக, வரும் டிசம்பரில் வங்கதேசத்துக்கு விளையாடச் செல்கிறது.

அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தகவல்படி, 3 ஒன் டே, 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் இந்தியா - வங்கதேசம் மோதவுள்ளன.

இதில் 3 ஒன் டே ஆட்டங்கள் முறையே டிசம்பா் 4, 7, 10 ஆகிய தேதிகளில் டாக்காவில் நடைபெறவுள்ளன. பின்னா் முதல் டெஸ்ட் டிசம்பா் 14 முதல் 18-ஆம் தேதி வரை சட்டோகிராமிலும், 2-ஆவது டெஸ்ட் டிசம்பா் 22 முதல் 26 வரை டாக்காவிலும் விளையாடப்படவுள்ளன.

இந்த டெஸ்ட் தொடரானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பட்டியலில் தற்போது 4-ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.

கடைசியாக 2015-இல் வங்கதேசம் சென்ற இந்தியா, ஒன் டே தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து, ஒரே டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT