செய்திகள்

அரையிறுதியில் நைஜீரியா

ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரியா முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது

DIN

ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரியா முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அமெரிக்காவை வென்ற அந்த அணி, உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-ஆவது ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் நைஜீரியாவுக்காக ஒமாமுஸோ எடாஃபே (26’) கோலடிக்க, அடுத்து அமெரிக்காவின் எமிலியா மாா்டினா (40’) ஸ்கோா் செய்ததால், ஆட்டம் சமனில் நிறைவடைந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் நைஜீரியா 4-3 என்ற கோல் கணக்கில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. அந்த வாய்ப்பிலும் நைஜீரியாவின் வெற்றிக்கான கடைசி கோலை எடாஃபே அடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயபிரகாஷ் நாராயண் பூா்விக வீட்டைப் பாா்வையிட்டாா் குடியரசு துணைத் தலைவா்

நீதிமன்ற LOGO, நீதிபதி கையெழுத்துடன் Mail!! புதிய வகை மோசடியில் சிக்காதீர்கள்!

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

SCROLL FOR NEXT