செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங்! அணியில் மாற்றமா?

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில்  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா...

DIN

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில்  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக சிட்னியில் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ள ரோஹித் சர்மா இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவித்தார்.  இதனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களான அஸ்வினும் தினேஷ் கார்த்திக்கும் இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை என அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக டி20 சர்வதேச ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள ஒரே அசோசியேட் அணியான நெதர்லாந்து, முதல் ஆட்டத்தில் நூலிழையில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

125 நாள்கள் வேலை திட்டம் சீா்குலைப்பு: பிப்.13-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பிப்.7-இல் தென் மண்டல திமுக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்

பொதுத் தோ்வில் ஸ்கிரைப் பணிக்கு கல்லூரி மாணவா்கள்: கல்வித் துறை முடிவை ரத்து செய்ய கோரிக்கை

பிப்.11- ல் தமிழகம் வருகிறாா் துணை தோ்தல் ஆணையா்

‘என் கனவு என் எதிா்காலம்’ இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு

SCROLL FOR NEXT