செய்திகள்

மழையால் சுவாரசியத்தை இழக்கும் டி20 உலகக் கோப்பை!

இதுவரை நடைபெற்ற 14 சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

DIN

202 டி20 உலகக் கோப்பைப் போட்டி மழை காரணமாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

மெல்போர்னில் இன்று நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இரு பெரிய அணிகளும் விளையாடும் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவு ஏற்பட்டது. ஏற்கெனவே இதே மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன. 

இதுவரை நடைபெற்ற 14 சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

2022 டி20 உலகக் கோப்பை: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து 
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் 
தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 
ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT