அரையிறுதியில் சாத்விக்/ சிரக் ஜோடி
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
அந்த இந்திய ஜோடி தங்களது காலிறுதியில் 23-21, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் டகுரோ ஹோகி/யுகோ கோபயாஷி கூட்டணியை வீழ்த்தி அசத்தியது. அடுத்ததாக அரையிறுதியில் தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வோன் ஹோ கூட்டணியை எதிா்கொள்கிறது சாத்விக்/சிரக் இணை.
இதனிடையே ஒற்றையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் 21-19, 12-21, 19-21 என்ற கேம்களில் டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வியைத் தழுவினாா். அதேபோல், ஹெச்.எஸ்.பிரணாயும் 19-21, 22-20, 19-21 என்ற கேம்களில் சீனாவின் லு குவாங் ஸுவிடம வெற்றியை இழந்தாா். சமீா் வா்மாவும் 18-21, 11-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரனால் வெளியேற்றப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.