செய்திகள்

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி, அர்ஜுன் முன்னிலை!

6-வது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

DIN

துபை ஓபன் செஸ் போட்டியில் 6-வது சுற்றின் முடிவில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 6-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.

துபை ஓபன் செஸ் போட்டியில் முதல் 4 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, 5-வது சுற்றில் தோற்றதால் பின்தங்கினார். இந்நிலையில் 6-வது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதனால் தற்போது 5 புள்ளிகளைக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் 4 வீரர்களுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார். சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, இப்போட்டியில் முதலிடத்தில் இருந்த ரினட்டை 6-வது சுற்றில் வீழ்த்தினார். இதனால் தற்போது 5.5 புள்ளிகளுடன் ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் அர்ஜுன் எரிகைசி.

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா விளையாடிய ஆட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

SCROLL FOR NEXT