செய்திகள்

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அணியில் காயம் காரணமாகப் பிரபல வீரர் வான் டர் டுசென் இடம்பெறவில்லை.

தெ.ஆ. அணி 

பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, நோர்கியா, பார்னெல், டுவென் பிரிடோரியஸ், ரபாடா, ரிலீ ரூஸ்ஸோ, ஷம்சி, ஸ்டப்ஸ். 

மாற்று வீரர்கள்: ஃபார்டின், மார்கோ யான்சென், அண்டிலே பெக்லுக்வாயோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரக்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

4 மாநிலங்களில் ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜக எம்.பி.யை சந்தித்து நலம் விசாரித்த மமதா!

மயிலியர்றளர் பொல்கி... மடோனா!

SCROLL FOR NEXT