செய்திகள்

2023 ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணியுடன் மோதவுள்ள அணிகள் எவை?

DIN

2023 ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

2023 ஜனவரியில் ஒடிஷாவில் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் ஒவ்வொரு நாடும் எந்தப் பிரிவில் இடம்பெறுகிறது என்பதற்கான முடிவு இன்று எடுக்கப்பட்டது. 

மொத்தமுள்ள 4 பிரிவுகளில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது.  டி பிரிவில் இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான பெல்ஜியம் பி பிரிவில் ஜெர்மனி, கொரியா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இணைந்துள்ளது.

2023 உலகக் கோப்பைப் போட்டி ஒடிஷாவில் ஜனவரி 13 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. 2018-ல் ஒடிஷாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று முறை சாம்பியனான நெதர்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது பெல்ஜியம் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT