செய்திகள்

யு.எஸ். ஓபன்: அரையிறுதியில் மோதும் வீராங்கனைகள்!

முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள். 

DIN

யு. எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதியில் மோதும் வீராங்கனைகளின் பட்டியல் உறுதியாகியுள்ளது.

இந்தமுறை யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள். 

போலந்தைச் சேர்ந்த நெ.1 வீராங்கனை ஸ்வியாடெக் 6-3, 7-6 (4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெலாரஸின் அரினா சபலேன்கா,  ஆன்ஸ் ஜபேர், கரோலினா கார்சியா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஸ்வியாடெக் முதல் இடத்திலும் ஆன்ஸ் ஜபேர் 5-வது இடத்திலும் அரினா சபலேன்கா 6-வது இடத்திலும் கரோலினா கார்சியா 17-வது இடத்திலும் உள்ளார்கள். 

யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர் -  கரோலினா கார்சியா இடையிலான மோதல் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT