ஸ்வியாடெக் 
செய்திகள்

யு.எஸ். ஓபன்: இறுதிச்சுற்றில் மோதும் வீராங்கனைகள்!

யு.எஸ். ஓபன் போட்டியில் இறுதிச்சுற்றுக்குப் பிரபல வீராங்கனைகளான ஸ்வியாடெக், ஆன்ஸ் ஜபேர் ஆகியோர் தகுதியடைந்துள்ளார்கள்.    

DIN

யு.எஸ். ஓபன் போட்டியில் இறுதிச்சுற்றுக்குப் பிரபல வீராங்கனைகளான ஸ்வியாடெக், ஆன்ஸ் ஜபேர் ஆகியோர் தகுதியடைந்துள்ளார்கள்.    

யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர் -  கரோலினா கார்சியா இடையிலான மோதல் நடைபெற்றது.

பிரெஞ்சு ஓபன் போட்டியை இருமுறை வென்ற ஸ்வியாடெக் 3-6, 6-1, 6-4  என்ற செட் கணக்கில் சபலேன்காவை வீழ்த்தினார். முதல்முறையாக யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆன்ஸ் ஜபேர்,  6-1, 6-3 என்ற நேர் செட்களில் கரோலினா கார்சியாவை வீழ்த்தினார். இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இருமுறை தகுதியடைந்த முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். கடந்த ஜூலையில் விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT