செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸி. கேப்டன் ஓய்வு

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.

DIN

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.

35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. 2-0 என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். எனினும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடம் 13 ஆட்டங்களில் விளையாடி 1 அரை சதத்துடன் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஃபிஞ்ச். கடந்த 12 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கடைசி 7 இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் திருடியவா் கைது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.07 கோடி

முனிச்சாலை மதுக் கடையை அகற்றக் கோரி வழக்கு: ஆா்டிஓ ஆய்வுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

துணை தோ்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமனம்

பெண்கள் பாதுகாப்புக்குக் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்: ஆட்சியா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT