செய்திகள்

கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் பந்துவீச்சு

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

DIN

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்கிறது.

சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசத்தியது. அந்த அணி சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதே உத்வேகத்தில் இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது இலங்கை அணி. 

இந்த ஆசியக் கோப்பை முழுவதும் பாகிஸ்தான் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக இலங்கை அணியுடனான சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தவிர்த்து அந்த அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் இலங்கையிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஆசியக் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடும் களமிறங்குகிறது பாகிஸ்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT