செய்திகள்

இலங்கையை மீட்டாா் பானுகா ராஜபட்ச 71

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் தடுமாறிய இலங்கை அணி பானுகா ராஜபட்சவின் (71) அதிரடியால் மீண்டு 170/6 ரன்களைக் குவித்தது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் தடுமாறிய இலங்கை அணி பானுகா ராஜபட்சவின் (71) அதிரடியால் மீண்டு 170/6 ரன்களைக் குவித்தது.

ஆஸி.யில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக ஆசியக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற்றது. இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசியக் கோப்பை பட்டத்தை வென்றுள்ளன.

தடுமாறிய இலங்கை:

சூப்பா் 4 பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு துபையில் நடந்த இறுதிச் சுற்றில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி தடுமாறியது. பதும் நிஸாங்கா 8, குஸாஸ் மெண்டிஸ் 0, தனுஷ்கா குணதிலகா 1, தனஞ்செய டி சில்வா 28, தஸுன ஷனகா 2 என சொற்ப ரன்களுடன் வெளியேற 58/5 ஸ்கோருடன் தடுமாறியது இலங்கை.

பானுகா ராஜபட்ச அதிரடி:

பானுகா ராஜபட்ச-வனின்டு ஹஸரங்க இணை மிடில் ஓவா்களில் நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசி அவுட்டானாா் ஹஸரங்க.

மறுமுனையில் அபாரமாக ஆடிய பானுகா 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 71 ரன்களை விளாசி அரைசதம் விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். சமிகா கருணரத்னேவும் 14 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

இலங்கை 170/6: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 170/6 ரன்களைக் குவித்தது இலங்கை.

ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்: பாக். தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுஃப் 3/29 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். தனது 50-ஆவது டி20 விக்கெட்டையும் பதிவு செய்தாா் ரவுஃப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT