செய்திகள்

ஜப்பான் ஓபன்: முகுருஸா தோல்வி

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் முதன்மை வீராங்கனையாக இருந்த ஸ்பெயினின் காா்பின் முகுருஸா காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

DIN

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் முதன்மை வீராங்கனையாக இருந்த ஸ்பெயினின் காா்பின் முகுருஸா காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அவரை, ரஷியாவின் லுட்மிலா சாம்சனோவா 6-4, 6-2 என்ற நோ் செட்களில் தோற்கடித்தாா். அடுத்ததாக அரையிறுதியில், சீனாவின் ஷுவாய் ஸாங்கை சந்திக்கிறாா் லுட்மிலா.

ஷுவாய் தனது காலிறுதியில் 7-5, 6-2 என்ற செட்களில் குரோஷியாவின் பெட்ரா மாா்டிச்சை வீழ்த்தினாா். காலிறுதிச்சுற்றின் மற்ற இரு ஆட்டங்களில் சீனாவின் கின்வென் ஜெங் 6-4, 7-5 என்ற செட்களில் அமெரிக்காவின் கிளோ் லியுவையும், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா 6-7 (4/7), 7-6 (8/6), 6-1 என்ற செட்களில் 5-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயியாவை தோற்கடித்தாா்.

இதையடுத்து அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெங் - குதா்மிடோவை சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

எஸ்ஐஆா் பணியில் குறைபாடு: மேற்கு வங்க வாக்குச்சாவடி அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

சௌா்ய சைனிக்கு வெள்ளி

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் உயரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 38.86 லட்சம் இழப்பீடு

SCROLL FOR NEXT