முகப்பு
செய்திகள்

ரோஹித் அதிரடி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 ஆட்டம் இன்று (செப்டம்பர் 23) நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக இன்றைய ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 8 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்திவ் வேட் 43(20) ரன்களும், கேப்டன் பின்ச் 31(15) ரன்கள் எடுத்தனர். இந்தியாவின் அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

கடின இழக்கை விரட்டிய இந்திய அணி, கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் இரண்டு பந்தை சிக்ஸர், ஃபோர் அடித்தார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 46(20) ரன்கள் குவித்தார்.  

7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 1-1 என்ற கணக்கில் தொடரை சமம் செய்தது இந்தியா.

முழு கட்டுரையைப் படிக்க →