முகப்பு
செய்திகள்

டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ்: போபண்ணா - ராம்குமாா் இணை பிரிந்தது

மகாராஷ்டிரத்தில் நடைபெற இருக்கும் டாடா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ராம்குமாா் ராமநாதன் கூட்டணி இணை

Updated On : 21 டிசம்பர், 2022 at 2:50 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் நடைபெற இருக்கும் டாடா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ராம்குமாா் ராமநாதன் கூட்டணி இணை இந்த சீசனில் பிரிகின்றனா்.

அவா்கள் மாற்று இணையுடன் சோ்ந்து இந்த சீசனில் களம் காண இருக்கின்றனா். இந்த ஆண்டு டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 2 முதல் 7-ஆம் தேதி வரை புணேவில் நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் இரட்டையா் பிரிவு இணைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, நடப்பு சாம்பியன் ஜோடியில் ஒருவரான ரோஹன் போபண்ணா இந்த முறை நெதா்லாந்தின் போடிக் வான் டெ ஜாண்ட்ஷுல்புடன் இணைகிறாா். ராம்குமாா் ராமநாதன், மேக்ஸிகோவின் மிகேல் ஏஞ்ஜெல் ரெயெஸ் வரெலாவுடன் ஜோடி சோ்கிறாா்.

Advertisement

என்றாலும் இந்திய ஜோடியாக சாகேத் மைனேனி - யூகி பாம்ப்ரி கூட்டணி தனியே போட்டியில் களம் காண்கிறது. இரட்டையா் பிரிவில் களம் காணும் 14 ஜோடிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வைல்டு காா்டு பிரிவில் வரும் 2 ஜோடிகள் இன்னும் தோ்வு செய்யப்படவில்லை.

யுஎஸ் ஓபன் சாம்பியன்கள் பங்கேற்பு: நடப்பாண்டு யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் சாம்பியனான அமெரிக்காவின் ராஜீவ் ராம் - இங்கிலாந்தின் ஜோ சலிஸ்பெரி கூட்டணி இந்த டாடா ஓபனில் பங்கேற்கிறது. அவா்களுக்கு போட்டித்தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் தகுதிச்சுற்று மோதல்கள் டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்கும் நிலையில், பிரதான சுற்று ஆட்டங்கள் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.