முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: 3-ம் இடத்துக்கு முன்னேறிய நியூசி. வீரர் ஜேமிசன்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் ஜேமிசன், 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் ஜேமிசன், 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8 விக்கெட்டுகளை எடுத்த ஜேமிசன், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3- இடம் பிடித்துள்ளார். மேலும் 825 புள்ளிகளைத் தொட்ட 5-வது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும் இந்தியா ஆர். அஸ்வின் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா 5-வது இடத்திலும் விராட் கோலி 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். முதல் இடத்தில் ஆஸி. வீரர் லபுஷேனும் 2-ம் இடத்தில் ஜோ ரூட்டும் 3-ம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →