செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பும் இங்கிலாந்து: ஜோ ரூட்டின் பதவி பறிக்கப்படுமா?

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோற்றதால் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் நீக்கப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி 64.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 28 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது மே.இ. தீவுகள் அணி. ஆட்ட நாயகனாக ஜோஷுவா ட சில்வாவும் தொடர் நாயகனாக கேப்டன் கிரைக் பிராத்வெயிட்டும் தேர்வானார்கள். 

கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய மூன்று தொடர்களிலும் தோற்றுள்ளது (இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள்). சொந்த மண்ணில் விளையாடிய இரு தொடர்களிலும் அதனால் ஜெயிக்க முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து 9-ம் இடத்தில் உள்ளது. ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது. 

இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்துள்ளார். அணியை முன்நகர்த்திச் செல்ல விரும்புகிறேன். இந்த அணி என் பின்னால் உள்ளது. நிறைய நல்ல விஷயங்களைச் செய்து வருகிறோம். அவற்றை நல்ல முடிவுகளாக நாங்கள் மாற்ற வேண்டும் என்று ரூட் கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் செயல்பட்டு புதிய கேப்டனை நியமிக்குமா அல்லது ரூட்டின் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியில் அவரைத் தொடர அனுமதிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணி

இந்தியாவிடம் தோல்வி (1-3)
நியூசிலாந்திடம் தோல்வி (0-1)
இந்தியாவிடம் பின்தங்கியுள்ளது (1-2)
ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (0-4)
மே.இ. தீவுகளிடம் தோல்வி (0-1)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமான சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி: இபிஎஸ் கண்டனம்

பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயணம்: ரயில்வே

லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற விமான கண்காட்சி!

நடிகா் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை: முதல்வா் என்.ரங்கசாமி

மனம் மயக்கும் டொனால் பிஷ்ட்!

SCROLL FOR NEXT