செய்திகள்

கைவிடப்பட்ட இந்தியாவின் 2-வது பயிற்சி ஆட்டம்!

DIN

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. பிரிஸ்பேனில் 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோத இருந்தது.

ஆனால், மழை காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

வரும் ஞாயிறன்று மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. அன்றைய தினம் மெல்போர்னில் மழை பெய்ய 90% வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 முதல் 25 மி.மீ. மழை பெய்யும் எனக் கூறப்படுவதால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது. 
ஒரு டி20 ஆட்டத்தில் முடிவு எட்டப்பட்ட குறைந்தது 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும். குரூப் ஆட்டங்களில் கூடுதல் நாள் கிடையாது. அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்களுக்கே அந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நேபாளம்: செய்தி நிறுவன தலைவர் கைது!

SCROLL FOR NEXT