பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னௌவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து. லக்னௌ முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். கைல் மேயர்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் தீபக் ஹூடா (2 ரன்கள்), க்ருணால் பாண்டியா (18 ரன்கள்), நிகோலஸ் பூரன் (0) கிருஷ்ணப்ப கௌதம் (1 ரன்) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (15 ரன்கள்) ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய வண்ணமே இருக்க கேப்டன் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று விளையாடி 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது லக்னௌ அணி.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது பஞ்சாப் கிங்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.