செய்திகள்

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா! 

DIN

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மா. சமீபகாலமாக தடுமாறிவரும் மும்பை அணியுடன் சேர்ந்து இவரும் ரன்கள் குவிக்காமல் தடுமாறி வருகிறார். 

இன்று மாலை சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் 8வது, 9வது முறையே மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் 14 ரன்களை எடுத்தால் ரோஹித்தால் 6000 ஐபிஎல் ரன்கள் என்ற இலக்கை அடைய முடியும். தற்போது 5986 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். இதுவரை ஐபிஎல்-இல் 6000 ரன்களை கடந்தவர்கள் 3 பேர் மட்டுமே. 

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. விராட் கோலி- 6844 ரன்கள் 
  2. ஷிகர் தவான்- 6477 ரன்கள் 
  3. டேவிட் வார்னர்- 6109 ரன்கள் 
  4. ரோஹித் சர்மா- 5986 ரன்கள் 
  5. சுரேஷ் ரெய்னா- 5528 ரன்கள் 
  6. ஏபிடி வில்லியர்ஸ்- 5162 ரன்கள் 
  7. எம்எஸ் தோனி - 5037 ரன்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT