முகப்பு
செய்திகள்

இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் என்னை பின் தொடர்வார்கள்: தோனி நெகிழ்ச்சி

இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் ரசிகர்கள் என்னைப் பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் ரசிகர்கள் என்னைப் பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி முடிவடைந்த பின் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

போட்டி முடிவடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியதாவது: இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன். ஜெய்ப்பூர் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். என் முதல் ஒரு நாள் போட்டி சதம் வைசாக் மைதானத்தில் தான் அடித்தேன். அது எனக்கு மேலும் 10 ஆட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், நான் ஜெய்ப்பூரில் அடித்த 183 ரன்கள் எனக்கு மேலும் ஒரு வருடம் வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தது என்றார்.

நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →