செய்திகள்

ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது மலேசியா!

DIN

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியா வென்றது.

7வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி சென்னையில் இன்று (ஆக. 3) முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

முதல் நாளான இன்று, 3 போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் தென்கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரியா வென்றது.

இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் - மலேசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே மலேசியா அதிரடியாக விளையாடியது. 

ஆட்டத்தின் பாதியில் 2 - 0 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியா அணி முன்னிலை வகித்தது. அதன்பிறகு தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி போராடி ஒரு புள்ளி எடுத்தது. 

எனினும் ஆட்டத்தின் முடிவில் மலேசியா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 தோற்றங்களில் அதர்வா!

அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்! பவார்,உத்தவுக்கு மோடி அறிவுரை

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

SCROLL FOR NEXT