செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள அணியின் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் சீன் அப்போட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT