படம் |ட்விட்டர் 
செய்திகள்

மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள்: லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அசத்தும் புஜாரா!

இந்திய அணியின் புஜாரா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

DIN

இந்திய அணியின் புஜாரா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் புஜாரா இங்கிலாந்தில் நடைபெறும் ராயல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் நேற்றையப் போட்டியில் சோமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சோமர்செட் 50 ஓவர்கள் முடிவில் 318 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சசெக்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் புஜாரா 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

புஜாரா கடந்த மூன்று போட்டிகளில் இரண்டாவது முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அவர் 23 ரன்கள், 106 ரன்கள் மற்றும் 56 ரன்கள் குவித்துள்ளார். 

புஜாரா கடைசியாக இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா அணியில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

SCROLL FOR NEXT