இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 2924 ரன்கள் எடுத்துள்ளார்.
2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 84 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் சூப்பர் ஓவரில் 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அசத்தினார். 2019 உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்கு சிறப்பாக இருந்தது. தற்போது டி20 மற்றும் டெஸ்டில் கவனம் செலுத்தி வருவதால் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா ஓய்வு!
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பை அணிக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டுமென தேர்வுக் குழு தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் இது குறித்து ஸ்டோக்ஸிடம் விசாரிக்கப்பட்டபோது அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: உலக செஸ்: காலிறுதியில் மோதும் காா்ல்சென் - குகேஷ்
சமீபத்தில் ஆஷஸ் போட்டியில் ஓய்வை ரத்து செய்து மொயின் அலி நாட்டிற்காக வந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பென் ஸ்டோக்ஸும் விளையாடுவாரென கிரிக்கெட் வட்டாரங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்.5ஆம் நாள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.