இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பை அணிக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டுமென தேர்வுக் குழு தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் இது குறித்து ஸ்டோக்ஸிடம் விசாரிக்கப்பட்டபோது அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: ஒருநாள் உலகக் கோப்பை அணியில் பென் ஸ்டோக்ஸ்?
ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்குபெற்றால் அக்டோபர்- நவம்பர் மாதம் இதிலேயே சென்றுவிடும். அடுத்து இங்கிலாந்திற்கு டிசம்பரில் மே.இ.தீவுகள் அணிகளுடன் போட்டி உள்ளது. இதனையடுத்து இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இதனையடுத்து வரும் ஐபிஎல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா ஓய்வு!
மேலும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் முட்டி வலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதற்காக ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2024 ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து!
ஏற்கனவே 2023 ஐபிஎல் போட்டியில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணிக்கு நஷ்டம்தான் என விமர்சித்து வந்தனர். தற்போது 2024 போட்டியிலும் விளையாடாவிட்டால் அவர் சிஎஸ்கே அணிக்கு தகுதியே இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணிக்கு ப்ராவோ இருந்த இடத்திற்கு ஒரு நல்ல ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. அதற்காகதான் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்தது. இனிமேல் அவர் சிஎஸ்கே அணிக்கு தேவையில்லை; தகுதியற்றவர் என விமர்சித்து வருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் இல்லாமலே சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதென ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.