செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி!

10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நியூசிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

DIN

10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நியூசிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் முறையே செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர், உலகக் கோப்பைக்கு முன்னதாக தங்களை தயார்படுத்திக் கொள்ள அந்த அணிகளுக்கு உதவும். 

நியூசிலாந்து அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது. அதேபோல வங்கதேசம் அக்டோபர் 7 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதற்கிடையில்  இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் வருகிற செப்டம்பர் 21 முதல் தொடங்கவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் உலகக் கோப்பை நிறைவடைந்த பிறகு நடத்தப்படவுள்ளது. டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21, இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 23 மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28 தொடங்கி டிசம்பர் 2 வரை நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 தொடங்கி டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.

நியூசிலாந்து கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT