photo courtesy bcci twitter 
செய்திகள்

முதல் டி20: இந்தியாவுக்கு 140 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20ஆட்டத்தில் முதலில் பேட்டிங்க செய்த அயர்லாந்து அணி 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20ஆட்டத்தில் முதலில் பேட்டிங்க செய்த அயர்லாந்து அணி 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அயர்லாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளிக்க இடையில் களமிறங்கிய கேம்பர் பொறுப்பாக சற்று நிலைத்து ஆடினார். 

இருப்பினும் அவர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெக்கர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அயா்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு139 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகுப் பகுதியில் காயம் கண்ட பும்ரா, அதற்கான அறுவைச் சிகிச்சை, ஓய்வு ஆகியவற்றை நிறைவு செய்து சுமாா் 11 மாதங்களுக்குப் பிறகு இத்தொடரில் கேப்டனாக களம்கண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Coolie முதல் Lokah வரை! Cinema updates! | Dinamani Talkies | Simbu | Vetrimaran | Prithviraj | Alia

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை அமைச்சர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

ஆவடி ராணுவ இயந்திர தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி!

குஜராத்: 2,600 அடி உயர மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்து விபத்து: 6 பேர் பலி!

SCROLL FOR NEXT