செய்திகள்

காயம் காரணமாக விலகிய பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்: உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 30) டர்பனில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் இரு அணிகளும் தங்களை உலகக் கோப்பைக்கு தயார் செய்து கொள்ளும் வாய்ப்பாக இந்த தொடரை பார்க்கின்றனர்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். கிளென் மேக்ஸ்வெல்லுக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டிருந்தது. காலில் ஏற்பட்டுள்ள காயத்தின் வலி அதிகமாக அவர் தற்போது டி20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார். 

இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகியுள்ளது, அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT