கோப்புப் படம் 
செய்திகள்

மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மூத்த வீரர் அணியில் சேர்ப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மூத்த வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். 

DIN

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை  (ஆகஸ்ட் 30) டர்பனில் நடைபெறுகிறது. 

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும், கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் தற்போது தனது வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார். 

“ஆஸி. அணியின் ஆல்ரவுண்டர்  மேக்ஸ்வெல் உலகக் கோப்பைக்கு முன்னதாகவே குணமாகி அடுத்த மாதம் நடைபெறும் இந்தியாவுடனான தொடரில் பங்கேற்பார். மேலும் உலகக் கோப்பையிலும் பங்கேற்பார்” என ஆஸி. அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மூத்த வீரர் மேத்திவ் வேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸி. அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபாட், டிம் டேவிட், பென் வார்ஷிஸ், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், ஸ்பென்ஸர் ஜான்சன், மாட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்டன் ஏகர், மேத்திவ் வேட், ஆடம் ஜாம்பா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT