பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் பலமுறை மோதுவது இந்திய அணி வீரர்களின் குணம் மற்றும் தனித்தன்மையை சோதிக்கும் என உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் பலமுறை மோதுவது இந்திய அணி வீரர்களின் குணம் மற்றும் தனித்தன்மையை சோதிக்கும் என உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 30) தொடங்கிய நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் இரு அணிகளும் மூன்று முறை தங்களுக்குள் மோதிக் கொள்ளும்.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால்....இலங்கை கேப்டன் பேட்டி!
இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் பலமுறை மோதுவது இந்திய அணி வீரர்களின் குணம் மற்றும் தனித்தன்மையை சோதிக்கும் என உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ஸுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணி வீரர்களின் குணம் மற்றும் தனித்தன்மையை சோதிக்கும் தொடராகவே நான் பார்க்கிறேன். உங்களால் எந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த அனைத்துக் காரணிகளும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ரசிகர்களின் உணர்வுகள் இதில் அடங்கியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் விளையாடப் போகிறோம். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது மிகப் பெரிய தொடர். நான் ஒருநாள் தொடருக்கு ஏற்றவாறு என்னை தயார் செய்துள்ளேன். நான் என்னை சரியாக தயார் செய்திருந்தால், ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். ஆட்டத்தின் பாதி நேரங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஆட்டத்தின் போக்கே முடிவு செய்யும். நாம் அதற்காக அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை என்றார்.