செய்திகள்

நவம்பரில் தொடங்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்டது. கடந்த சீசனில் இந்தியா கேப்பிடல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. முதல் சீசனில் சுரேஷ் ரெய்னா, ஆரோன் ஃபின்ச், ஹாசிம் ஆம்லா, ராஸ் டெய்லர் மற்றும் கிறிஸ் கெயில்  போன்ற பல்வேறு மூத்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 

இந்த நிலையில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தலைவர் ரவி சாஸ்திரி கூறியதாவது: உலக தரத்திலான கிரிக்கெட் எப்போதுமே வரவேற்கப்படுகிறது. இந்த சீசனில் மேலும் பல வீரர்கள் இணைய உள்ளதால் ஆட்டத்தில் உற்சாகத்துக்கு பஞ்சமிருக்காது. இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின்  முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் கேட்பாரற்று கிடக்கும் மன்னா் உருவம் பொறித்த கல் தூண்

சிவகங்கை நகராட்சியின் முதல் தலைவா் காலமானாா்

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் தீவிர சோதனை

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவை

சிவகங்கையில் உள்ள நீதிமன்றங்களை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

SCROLL FOR NEXT