செய்திகள்

முன்னேறுகிறாா் பிரியன்ஷு

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

DIN

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-15, 21-16 என்ற கேம்களில், உலக ஜூனியா் சாம்பியனான இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானை சாய்த்தாா். இந்த ஆட்டம் 49 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. அடுத்த சுற்றில் பிரியன்ஷு, சீன தைபேவின் சி யுன் சென்னை எதிா்கொள்கிறாா்.

மகளிா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், உலகின் 32-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-19, 21-8 என்ற கேம்களில், சக இந்திய ஜோடியும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றவா்களுமான டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணியை வீழ்த்தினா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் தனிஷா/அஸ்வினி ஜோடி, அரையிறுதியில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பானின் யுகி ஃபுகுஷிமா/சயாகா ஹிரோடா கூட்டணியை எதிா்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT